உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / தீபாவளி சிறப்பு பங்கு வர்த்தகம் சென்செக்ஸ், நிப்டி சரிவில் முடிந்தது

தீபாவளி சிறப்பு பங்கு வர்த்தகம் சென்செக்ஸ், நிப்டி சரிவில் முடிந்தது

தீபாவளி திருநாளை முன்னிட்டு நாட்டின் பங்கு சந்தைகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் 'முகூர்த்த வர்த்தகம்' நேற்று நடைபெற்றது. புதிய இந்து கணக்கு ஆண்டான சம்வத் 2083 தொடக்கத்தை குறிக்கும் இந்த சிறப்பு வர்த்தகத்தில், உயர்வுடன் துவங்கிய சந்தைகள், சிறிது இறக்கத்தில் நிறைவடைந்தன. முக்கிய அம்சங்கள்  பிற்பகல் 2:20 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,442 புள்ளிகளை எட்டியது. அதே போல், நிப்டி 25,100 புள்ளிகளை கடந்து புதிய உச்சத் தை நோக்கி பயணித்தது.  வர்த்தகத்தின் இறுதி நிமிடங்களில் முதலீட்டாளர்கள் லாப பதிவில் ஈடுபட்டதால், சந்தையின் வேகம் சற்றே குறைந்து சென்செக்ஸ் 28.62 புள்ளிகள் (0.04%) சரிந்து 80,999.40 புள்ளிகளிலும், நிப்டி 43.95 புள்ளிகள் (0.18%) சரிந்து 24,986.40 புள்ளிகளிலும் நிலைபெற்றன. சென்செக்ஸ் 81,000க்கும், நிப்டி 25,000க்கும் கீழிறங் கின.8 ஆண்டுகளில் ஏற்றம் 2 ஆண்டுகளில் சரிவுஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு பங்கு சந்தைகளில் சிறப்பு வர்த்தகம் நடத்தப்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில், 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளை தவிர மற்ற எட்டு ஆண்டுகளிலுமே சிறப்பு வர்த்தகத்தில் பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்துள்ளதாக சந்தை தரவுகள் வாயிலாக தெரியவருகிறது.அதிகபட்சமாக 2022ம் ஆண்டில் நிப்டி 0.88 சதவீதம் உயர்ந்துள்ளது.

துறைகள் வாரியான

செயல்பாடுபார்மா மற்றும் மீடியா துறை பங்குகள் ஒரு சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தன. மெட்டல் துறையும் நல்ல வரவேற்பை பெற்றது. ஐ.டி., மற்றும் நிதிசேவை துறைகளில் சிறிதளவு விற்பனை அழுத்தம் காணப்பட்டது.Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !