சரிவிலும் இனிக்கும் சர்க்கரை பங்குகள்
ப ங்குச் சந்தை இன்று 'ரத்தக் களறி யாக' காட்சியளித்த போதிலும், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஒரே நாளில் 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. முக்கிய காரணங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால், 'எத்தனால்' எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும். மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடான பிரேசில், கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதைக் குறைத்துவிட்டு, லாபம் தரும் எத்தனால் தயாரிப்பிற்கு மாறும் இது உலகச் சந்தையில் சர்க்கரை தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் விலையை உயர்த்தும். 'ஹார்முஸ் ஜலசந்தி' வழித்தடத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பால், துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய 'சர்க்கரை சுத்திகரிப்பு' ஆலைக்கு கச்சாப் பொருட்கள் போவது தடைபட்டிருக்கிறது. இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. விலை உயர்ந்த பங்குகள் (மார்ச் 4 நிலவரப்படி): எஸ்.பி.இ.சி., சுகர்ஸ்: 11.54% பஜாஜ் ஹிந்துஸ்தான்: 10.25% பொன்னி சுகர்ஸ் (ஈரோடு): 10.24% ரனா சுகர்ஸ்: 9.23% த்வாரிகேஷ் சுகர்: 9.60% உகர் சுகர் ஒர்க்ஸ்: 8.51% ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ்: 7.84% இந்தியன் சுக்ரோஸ்: 7.81% ராஜ்ஸ்ரீ சுகர்ஸ்: 7.38% பல்ராம்பூர் சீனி : 7.30% சக்தி சுகர்ஸ்: 6.65% அவத் சுகர்: 6.10% டால்மியா பாரத்: 5.94% மகத் சுகர்: 4.86% உத்தம் சுகர்: 4.26% தாம்பூர் சுகர்ஸ்: 3.46%