டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,000 ஒரு முக்கிய ரெசிஸ்டென்ஸாக இருக்கக்கூடும்
ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தை சந்தித்து உயர்ந்த புள்ளிகளை இழந்து, பின் மீண்டு என தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிப்டி, இரண்டு மணிக்கு மேல் திடீரென ஒரே பாய்ச்சலாக கணிசமான ஏற்றத்தைச் சந்தித்து, நாளின் இறுதியில் 285 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்த பட்சமாக 1.04 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.85 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 2.29 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.59 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.