உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: 22,649க்கு கீழே சென்றால் இறக்கம் தொடரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 22,649க்கு கீழே சென்றால் இறக்கம் தொடரக்கூடும்

ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு 23,016.00 23,120.90 22,649.90 22,811.35 நிப்டி 127 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி, 11.30 மணியளவில் இறங்க ஆரம்பித்து தொடர்ந்து இறங்கி -239 வரை சென்று பின்னர் மீண்டு நாளின் இறுதியில் 77 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.56 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.61 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறைசார் குறியீடுகளில் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும், 18 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு அதிகபட்சமாக 2.88 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 2.64 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,698 நிறுவனங்களின் பங்குகளில் 608 ஏற்றத்துடனும், 2,988 இறக்கத்துடனும், 102 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 21 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்திருப்பது குறுகிய கால மொமென்டம் பலவீனமடைந்திருப்பதை காட்டுகின்றது. எம்.ஏ.சி.டி., -164.08 என்ற அளவில் சிக்னல் லைனான -242.24க்கு மேல் இருப்பது பியரிஷ் மொமென்டம் சற்று குறைவதை உணர்த்துகின்றது. ஆர்.ஓ.சி., 1.74 என்ற அளவில் பாசிட்டிவ்வாக இருக்கிறது. ஆனால், இதை மட்டும் வைத்து தற்போதைய மீட்சி தொடரும் என்று உறுதியாக கூற முடியாது. அதேநேரம் ஆர்.எஸ்.ஐ., 46.27 என்ற அளவிலும் ஸ்டோக்காஸ்ட்டிக் கே% 40.95 என்ற அளவிலும் இருப்பது ஏற்றத்திற்கான வேகம் குறைந்திருப்பதை காட்டுகின்றது. முக்கிய சராசரிகளுக்கு கீழே நிப்டி நிறைவடைந்திருப்பதால் மொத்தத்தில் டிரெண்டு பலவீனமாக இருக்கின்றது எனலாம். 22,649க்கு கீழே சென்றால் இறக்கம் தொடர வாய்ப்புள்ளது. 23,016 மற்றும் 23,120க்கு மேலே நிலைத்தால் மீட்சி தொடர்வதற்கான வாய்ப்புள்ளது. 22,601 22,390 22,210 23,072 23,332 23,512 டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் பங்கு பரிந்துரை பகுதியை வழங்கியவர்: டாக்டர் எஸ். கார்த்திகேயன், செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் |செபி பதிவு எண்: INH200001384 | பிஎஸ்இ என்லிஸ்ட்மெண்ட் எண்: 5093|. அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.comஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும். இன்று வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள் (ஒரு நாள் வர்த்தகத்துக்கு மட்டும்) நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 21.10.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள் எவரெஸ்ட் கான்டோ சிலிண்டர் (எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): -0.11) 103.70 99 95 108 5 இன்போசிஸ் 1,168.00 1154 1139 1177 4, 6 என்.சி.சி., (எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 0.32) 123.40 121 120 126 இல்லை ஆயில் இந்தியா (எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 0.52) 454.00 449 445 456 1 பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ்(9):0.07 ஆர்ஓசி(9): -0.94 252.15 248 244 255 இல்லை (1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு (5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை