உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறியதொரு டெக்னிக்கல் ஏற்றம் வந்து போக வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறியதொரு டெக்னிக்கல் ஏற்றம் வந்து போக வாய்ப்புள்ளது

நேற்று 197 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி 260 புள்ளிகள் வரை வீழ்ச்சிகண்டது. பின்னர் சிறிது சிறிதாக இறக்கத்தில் இருந்து மீண்டு நாளின் இறுதியில் 141 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் சரிவுடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு குறைந்தபட்சமாக 0.37 சதவீதமும், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.70 சதவீதமும் சரிந்து நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஆயில்&கேஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.33 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 1.79 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,630 நிறுவனங்களின் பங்குகளில் 1,445 ஏற்றத்துடனும்; 2,072 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 24,160 - 24,200 என்ற எல்லைக்குள் இருக்கின்ற முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிப்டி நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., (38.34), ஆர்ஓசி(-1.54) மற்றும் எம்.ஏ.சி.டி.,(-52.43) போன்றவை இறக்கத்திற்கு சாதகமாகவே இருக்கின்றன.

Galleryஸ்டோக்காஸ்ட்டிக் (23.93) மட்டும் சிறிய டெக்னிக்கல் ரீதியான ஏற்றம் வரக்கூடும் என்பதை காட்டுகிறது. 23,900 - 23,800 லெவல்கள் உடனடி சப்போர்ட்டாக இருக்கின்றன. 23,800-க்கு கீழே சென்றால் 23,500 வரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டி 23,965 - 24,000 லெவல் உடனடி ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. இதைத்தாண்டி மேலே சென்றால் 24,165 - 24,200 வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,200க்கு கீழே இருக்கும் வரை இறக்கத்திற்கு சாதகமான டெக்னிக்கல் சூழல் தொடரலாம் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி