நேற்று 83 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி 9.45 மணியளவில் ஏறிய புள்ளிகள் அனைத்தையும் இழந்தது. அதன் பின்னர் மீண்டும் ஏற தொடங்கிய நிலையில் நாளின் இறுதியில் 99 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ல் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.37 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 0.18 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிக பட்சமாக 1.63 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 1.58 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,662 நிறுவனங்களின் பங்குகளில் 1,688 ஏற்றத்துடனும்; 1,851 இறக்கத்துடனும்; 123 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் ஆர்.எஸ்.ஐ., ஸ்டோக்காஸ்ட்டிக் மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் %கே மற்றும் %டி போன்ற அளவீடுகள் ஓவர் சோல்டு நிலைமைக்குள் சென்றிருப்பதையே காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ.,-யும் இதையே உணர்த்துகிறது. எனவே, இன்னும் சிறிய அளவிலான பவுன்ஸ் பேக் தொடர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இருப்பினும் எம்.ஏ.சி.டி., (-241.42), இ.எம்.ஏ., எம்.ஏ.சி.டி., (-157.95), எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (-83.47) போன்றவையும் ஆர்.ஓ.சி.,யும் (-3.96) போன்றவை மொமென்டம் இன்னும் பலகீனமாக இருப்பதையே காட்டுகின்றன.
Galleryஇந்த டெக்னிக்கல் சூழலில் 23,116 உடனடி சப்போர்ட்டாக இருக்கிறது. இதற்கு மேலே நிப்டி தொடரும் வரை டெக்னிக்கல் ரெக்கவரி தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது எனலாம். டெக்னிக்கல் சூழல் ஏற்றத்துக்கு சாதகமாக மாறுவதற்கு நிப்டி 23,392-23,644 என்ற லெவல்தனை கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை மீண்டும் இறங்க ஆரம்பித்து 23,116-க்கு கீழே இறங்கினால் நிப்டியில் பலவீனம் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனலாம்.