UPDATED : ஏப் 22, 2026 02:12 AM | ADDED : ஏப் 22, 2026 02:03 AM
ஏற்றத்தில் ஆரம்பித்து பின்னர் தொடர்ந்து ஏற்றம் கண்ட நிப்டி நாளின் இறுதியில் 211 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மிட்கேப்50 குறியீடு குறைந்தபட்சமாக 0.47 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 1.06 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 17 குறியீடுகள் ஏற்றத்துடனும் 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி பார்மா குறியீடு அதிகபட்சமாக 0.08 சதவீத இறக்கத்துடனும், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 2.55 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
Galleryவர்த்தகம் நடந்த 3,436 பங்குகளில் 2,088 ஏற்றத்துடனும் 1,245 இறக்கத்துடனும், 103 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 14, 21 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இஎம்ஏ) மேலே நிப்டி நிறைவடைந்துள்ளது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் இன்னும் ஏற்றத்திற்கு வாய்ப்பு இருப்பதையே காட்டுகின்றது. அதேநேரம், ஆசிலேட்டர்கள் ஓவர் பாட் நிலைமைக்குள் சென்றுகொண்டு இருக்கின்றன. டெக்னிக்கலாக இது கன்சாலிடேஷன் நடக்காமல் அடுத்த கட்ட பெரிய ஏற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என்பதை காட்டுகின்றது. இந்த சூழ்நிலையில் 24,800 வரை மெள்ளமெள்ள ஏற்றம் கண்டு அதன் பின்னால் சிறிய இறக்கம் (புல்பேக்) வந்த பின்னரே அடுத்த கட்ட ஏற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதேநேரம், செய்திகள் மிகவும் சாதகமாக இருந்தால் 24,800க்கு மேலே வெகு சுலபமாக சென்று விடக்கூடும்.