டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் டெக்னிக்கல் மீட்சிக்கான வாய்ப்பு குறைவு
நேற்று 225 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து இறக்கம் கண்டு நாளின் இறுதியில் 383 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்த பட்சமாக 1.39 சதவீத சரிவுடனும், 'நிப்டிமிட்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 2.57 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ரீட்ஸ் & ரியால்ட்டி' குறியீடு குறைந்த பட்சமாக 0.39 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிக பட்சமாக 4.37 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,629 நிறுவனங்களின் பங்குகளில் 942 ஏற்றத்துடனும்; 2,586 இறக்கத்துடனும்; 101 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி மீண்டும் பியரிஷ் டெக்னிக்கல் அமைப்புக்குள் சென்றுவிட்டது. 14, 21, 50, 100 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., (-229.76) சிக்னல் லைனுக்கு (-211.54) கீழே உள்ளது. ஆர்.எஸ்.ஐ., (30.97) சற்று ஓவர் சோல்டு நிலைக்கு அருகே சென்றுள்ளது.