மேலும் செய்திகள்
23,600 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது
12-May-2026
நேற்றைய வர்த்தகத்தில் கணிசமான உயர்வுடன் தொடங்கிய நிப்டி, பிற்பகல் 2.30 மணியளவில் சட்டென இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 31 புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 17 குறியீடுகள் உயர்வுடனும், 1 குறியீடு சரிவுடனும், முடிந்தன. இவற்றில், 'நிப்டி 200' குறியீடு குறைந்தபட்சமாக 0.17 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.22 சதவீதமும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 'நிப்டி100' குறியீடு மட்டும் 0.01 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் உயர்ந்தும், 5 குறியீடுகள் குறைந்தும் காணப்பட்டன. இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.23 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.74 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,355 நிறுவனங்களின் பங்குகளில் 2,150 அதிகரித்தும், 1,109 குறைந்தும், 96 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. நிப்டி 14, 21, 50, 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயே உள்ளது. இது, நிப்டி டெக்னிக்கலாக பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., .உள்ளிட்ட மொமொண்டம் இண்டிக்கேட்டர்களை கணக்கிட்டாலும் கீழ்நோக்கிய அழுத்தம் இருப்பதே தெரிகிறது.
12-May-2026