மேலும் செய்திகள்
24,260-ஐ நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது
26-Jun-2026
நேற்று 56 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 169 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் ஏற்றத்துடன் முடிந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 1.25 சதவீதமும், 'நிப்டி மிட்கேப்100' குறியீடு குறைந்தபட்சமாக 0.48 சதவீதமும் ஏற்றத்துடன் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 19 குறியீடுகள் உயர்வுடனும்; 2 குறியீடுகள் சரிவுடனும் காணப்பட்டன இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 4.64 சதவீதம் உயர்ந்தும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.43 சதவீதம் சரிந்தும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,452 நிறுவனங்களின் பங்குகளில் 2,225 ஏற்றத்துடனும்; 1,145 இறக்கத்துடனும்; 82 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்திருந்தன. வலுவான ரெசிஸ்டென்ஸ் உள்ள லெவலில் குறைவான புல்லிஷ்னெஸுடன் நிப்டி நிறைவடைந்துள்ளது. குறுகிய கால சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு க்ளெடுக்கு மேலே நிறைவடைந்திருப்பது ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது.
26-Jun-2026