உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் தொடர்வதற்கு நிப்டி 24,200ஐ தாண்ட வேண்டும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் தொடர்வதற்கு நிப்டி 24,200ஐ தாண்ட வேண்டும்

நேற்று 37 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி 132 வரை ஏற்றம் கண்டு பின்னர் இறங்கி 24 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ல் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் 2 குறியீடுகள் மாற்றம் ஏதுமில்லாமல் நிறைவடைந்தன.இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.67 சதவீத உயர்வுடனும், 'நிப்டிமிட்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 0.25 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும;் 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிக பட்சமாக 1.07 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 0.90 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,648 நிறுவனங்களின் பங்குகளில் 2,016 ஏற்றத்துடனும்; 1,517 இறக்கத்துடனும்; 115 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.நிப்டி வர்த்தக நாளின் இடையே ஏற்றம் கண்ட போதும் அனைத்து முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கிழே சென்று நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., -80.08 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ., 38.37 என்ற அளவிலும் இருப்பது மொமென்டம் மிகவும் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது. ஸ்டோக்காஸ்டிக் 25.90 என்ற அளவில் இருப்பது சிறிய டெக்னிக்கல் ரீதியான ஏற்றத்திற்கு வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது.Galleryஉடனடி சப்போர்ட் 23,890 என்ற அளவில் இருக்கிறது. இந்த அளவை உடைத்து இறங்கினால் 23,800 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. உடனடி ரெசிஸ்டென்ஸ் 23,950ல் இருக்கிறது. இதை அளவை கடந்து மேலே சென்றால் 24,100 வரை செல்லவாய்ப்பு உள்ளது. 24,200-ஐ தாண்டி செல்லாத வரை நிப்டி பலவீனமாகவே இருக்கிறது என கொள்ளவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை