டெக்னிக்கல் அனாலிசிஸ் : 23,500க்கு மேலே இருக்கும் வரை நிப்டி இறங்க வாய்ப்பு குறைவு
நிப்டி நேற்று ஏற்றத்துடனே துவங்கிய நிலையில், நாளின் இறுதியில் 461 புள்ளிகள் அதிகரித்தே முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு குறைந்தபட்சமாக 1.95 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 3.02 சதவீதமும் உயர்வுடன் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 20 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மட்டும் இறக்கத்துடனும் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு குறைந்தபட்சமாக 0.30 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் எக்ஸ் - பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 3.83 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஐ.டி.,' குறியீடு மட்டும் 0.09 சதவீத இறக்கத்துடன் முடிந்தது. வர்த்தகம் நடந்த 3,390 நிறுவனங்களின் பங்குகளில் 2,739 ஏற்றத்துடனும்; 564 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி ஒரே பாய்ச்சலாக ஏற்றம் கண்டு 10 மற்றும் 20 நாட்கள் சராசரிகளுக்கு மேலே (இ.எம்.ஏ.,) சென்று நிறைவடைந்துள்ளது.