உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் குறுகிய கால அளவீட்டில் ஏற்றத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் குறுகிய கால அளவீட்டில் ஏற்றத்துக்கு வாய்ப்பு

நேற்று 28 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, அதிலிருந்து முழுமையாக மீண்டு, பின் ஒரு முறை ஏறிய புள்ளிகள் அனைத்தையும் இழந்து, அதற்கடுத்து உயர ஆரம்பித்து, 264 புள்ளிகள் என்ற உச்சகட்ட அளவிலான ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 197 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.பரந்த சந்தை குறியீடுகள் 18-ல், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; ஒன்று இறக்கத்துடனும் நிறைவடைந்தது. இவற்றில், 'நிப்டி100' குறியீடு, அதிகபட்சமாக 0.68 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப்150' குறியீடு குறைந்தபட்சமாக 0.08 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு மட்டும் 0.09 சதவிகித இறக்கத்துடன் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 18 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.இவற்றில் 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 2.17 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 0.42 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,396 நிறுவனங்களின் பங்குகளில் 1,735 ஏற்றத்துடனும்; 1,566 இறக்கத்துடனும்; 95 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி வலுவானதொரு புல்லிஷ் கேண்டிலுடன் நிறைவடைந்துள்ளது.குறுகிய மற்றும் நடுத்தர கால சராசரிகளுக்கு மேலே நிப்டி நிறைவடைந்துள்ளது. மொமெண்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., ஏற்றத்தையே காட்டுகிறது. 'இச்சிமோகு' அமைப்பு டெக்னிக்கலாக மேலும் ஏற்றம் வரக்கூடும் என்பதற்கு சாதகமான சிக்னலை வழங்குகிறது. உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,090-ல் உள்ளது.அதற்கு மேலே 24,150, -24,200 என்ற லெவலில்தான் வலுவான ரெசிஸ்டென்ஸ் உள்ளது. இறக்கம் வந்தால் 23,900-ல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்தபடியாக 23,830-, 23,750 லெவலில் மட்டுமே வலுவான சப்போர்ட் இருக்கிறது. 23,750-க்கு மேலே நிப்டி இருக்கும் வரை, குறுகியகாலத்தில் ஏற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது எனலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை