மேலும் செய்திகள்
நடப்பாண்டில் ஐ.டி., பங்குகள் 22% சரிவு
18 hour(s) ago
கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்
18 hour(s) ago
தினம் ஒரு பங்கு
07-Sep-2026
தங்க பத்திர முதலீடு 227% லாபம்
07-Sep-2026
சந்தை விலை நிலவரம்
06-Sep-2026
நேற்று 36 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 144 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள், 17ல் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.52 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.40 சதவீத இறக்கத்துடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.31 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.98 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,648 நிறுவனங்களின் பங்குகளில் 1,710 ஏற்றத்துடனும்; 1,833 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி எல்லா முக்கிய சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,) கீழே மீண்டும் நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., - ஆர்.ஓ.சி., போன்றவை இறக்கத்திற்கு ஆதரவான நிலையிலேயே இருக்கின்றன. மேலும், ஒரு சில நாட்களாக குறைந்த உச்சம் மற்றும் குறைந்த நீச்சம் என்ற நிலைமை தொடர்ந்து வந்துள்ளது. எனவே, குறுகிய கால டெக்னிக்கல் சூழல் இறக்கத்திற்கு சாதகமாகவே உள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
07-Sep-2026
07-Sep-2026
06-Sep-2026