உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டியில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்க வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டியில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்க வாய்ப்பு

நேற்று மாற்றம் ஏதுமில்லாமல் தொடங்கிய நிப்டி, பின்னர் இறங்க ஆரம்பித்து 204 வரை வீழ்ச்சி கண்டது. பின் சற்று மீண்டு நாளின் இறுதியில் 35 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.37 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.29 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Galleryஇவற்றில், நிப்டி பி.எஸ்.யு., குறியீடு அதிகபட்சமாக 2.05 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.54 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,476 நிறுவனங்களின் பங்குகளில் 1,504 ஏற்றத்துடனும்; 1,867 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்திருந்தன. நிப்டி இறக்கத்துடன் கூடிய வாலட்டைலிட்டிக்கு தயாராவதைப்போன்ற டெக்னிக்கல் செட் அப் உருவாகி கொண்டிருக்கிறது. குறுகிய காலத்தில் விற்பனை அழுத்தம் உருவாகிறது என்பதை ஒரு சில டெக்னிக்கல் அமைப்புகள் உணர்த்துகிறது. இருப்பினும் 21, 50 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு மேலே நிப்டி இருப்பதும் ஆர்.எஸ்.ஐ., 54.81 என்ற அளவில் இருப்பதும் மத்திம கால அளவில் ஏற்றத்திற்கான வாய்ப்பு கொஞ்சம் இருப்பதை காட்டுகிறது. 24,265 என்ற லெவலில் உடனடி சப்போர்ட் உள்ளது. இதனை தாண்டி இறங்கினால் 24,190 - 24170 என்ற லெவல்கள் வரை செல்ல வாய்ப்புள்ளது. நிப்டி 24,570க்கு மேலே சென்றால் புல்லிஷ் மொமென்டம் மீண்டும் உயிர்பெற்று 24,775 வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,170க்கும் கீழே சென்றால் நிப்டி அதிக அளவில் பலவீனம் அடையக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை