உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 22,513க்கு கீழே இருக்கும் வரை பலவீனம் தொடரும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 22,513க்கு கீழே இருக்கும் வரை பலவீனம் தொடரும்

நேற்று 4 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் நிப்டி 371 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.76 சதவீதமும், 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.82 சதவீதமும் சரிவுடன் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் வீழ்ச்சியுடன் சரிந்தன. இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 3.55 சதவீத இறக்கத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு குறைந்தபட்சமாக 0.08 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,722 நிறுவனங்களின் பங்குகளில் 660 ஏற்றத்துடனும்; 2,950 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன. நிப்டி மிகவும் பலவீனமான நிலையில் நிறைவடைந்துள்ளது. எல்லா முக்கிய சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்திருப்பது, நெகட்டிவ் எம்.ஏ.சி.டி., நெகட்டிவ் ஆர்.ஓ.சி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., 27.55 என்ற அளவில் இருப்பது போன்ற அனைத்தும் சேர்ந்து நிப்டியின் பலவீனத்தையே தெளிவாக காட்டுகின்றன. Galleryதற்போதைய டெக்னிக்கல் சூழலில் 22,513க்கு கீழே இருக்கும் வரை நிப்டி பலவீனமாக மட்டுமே இருக்கும். 22,179க்கு கீழே சென்றால் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. 22,513-க்கு மேலே சென்றால் 22,671 வரை ஏற்றம் வரக்கூடும். ஏற்றத்திற்கான டிரெண்டு உருவாக, நிப்டி 23,015 - 23,160 லெவலை கடக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !