உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  டெக்னிக்கலாக நிப்டியில் பலவீனம் தெரிகிறது

 டெக்னிக்கலாக நிப்டியில் பலவீனம் தெரிகிறது

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 25,648.55 25,791.75 25,603.95 25,665.60 ஆரம்பத்தில் இருந்தே செல்லும் திசை தெரியாமல், சிறு சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 66 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.86 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி 100' குறியீடு அதிக பட்சமாக 0.15 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 2.70 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.08 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,242 பங்குகளில், 1,572 ஏற்றத்துடனும்; 1,567 இறக்கத்துடனும்; 103 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. 20 நாள் மற்றும் 50 நாள் இ.எம்.ஏ-.,க்களுக்கு (சராசரிகள்) கீழே வர்த்தகமாவதால், டெக்னிக்கலாக நிப்டியில் பலகீனம் தெரிகிறது. இறக்கமோ அல்லது கன்சாலிடேஷனோ நடக்க மட்டுமே வாய்ப்பிருப்பதாக, டெக்னிக்கல்கள் காட்டுகின்றன. தற்போதைய சூழலில் நல்லதொரு ஸ்திரமான டெக்னிக்கல் சப்போர்ட் 25,150-க்கு அருகேதான் இருக்கிறது. செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆதரவு 25,590 25,495 25,425 தடுப்பு 25,765 25,870 25,940 நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி 50 (எண்ணிக்கை) டாடா ஸ்டீல் 189.35 6.78 எட்டர்னல் 298.80 4.25 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 925.00 -12.35 ஓ.என்.ஜி.சி., 247.98 4.20 என்.டி.பி.சி., லிட். 349.00 11.10 நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை) எஸ் பேங்க் 22.95 0.16 சுஸ்லான் எனர்ஜி 48.99 0.30 என்.எம்.டி.சி., லிட். 83.70 1.58 ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 99.53 0.26 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 83.05 0.09 நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை) ஐநாக்ஸ் விண்ட் 114.39 -0.77 என்.பி.சி.சி., (இந்தியா) 105.22 -0.09 இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 139.05 -2.26 மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் 2,415.00 122.00 பந்தன் பேங்க் 145.20 1.83 மற்ற சில பங்குகளின் விலை விபரம் பேங்க் ஆப் இந்தியா 152.78 5.22 டால்மியா பாரத் 2,174.90 69.40 இண்டஸ் டவர்ஸ் 438.95 11.05 லாரஸ் லேப்ஸ் 1,090.40 32.10 மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் 860.85 23.60


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ