உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / காளை களைப்படைந்தது போல தெரிகிறது! :டெக்னிக்கல் அனாலிசிஸ்

காளை களைப்படைந்தது போல தெரிகிறது! :டெக்னிக்கல் அனாலிசிஸ்

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவுநிப்டி 26,021.80 26,029.85 25,876.50 25,910.05நிப்டி பேங்க் 58,990.50 59,103.65 58,798.90 58,899.25நிப்டிஇறக்கத்தில் ஆரம்பித்து, நாள் முழுதும் சின்னச்சின்ன மாறுதல்களுடன் இறக்கத்திலேயே பயணித்த நிப்டி, நாளின் இறுதியில் 103 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்து குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி குறியீடு குறைந்தபட்சமாக 0.40 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்100' அதிகபட்சமாக 1.05 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு குறைந்தபட்சமாக 0.03% இறக்கத்துடனும்; 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.91% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,212 பங்குகளில் 967 ஏற்றத்துடனும்; 2,167 இறக்கத்துடனும்; 78 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டிரெண்ட் பாசிட்டிவ்வாக தொடர்கிற போதிலும், பல இண்டிகேட்டர்கள், காளைகள் களைப்படைந்து விட்டன என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அவற்றில் ஒரு சில இறக்கத்திற்கு கட்டியம் கூறும் வகையிலும் இருக்கின்றன. சமீபத்தில் கண்ட லாபத்தை ஜீரணித்த பின்னரே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்ற டெக்னிக்கல் சூழல் தென்படுகின்றது. சட்டென ரிவர்சல் வருவதற்கு, நாளை 25,940-க்கு மேல் துவங்கி அந்த லெவலுக்கு மேலேயே தொடர்ந்து வர்த்தகம் நடக்கவேண்டும். இதை செய்திகளே முடிவு செய்யும்.ஆதரவு 25,840 25,780 25,720தடுப்பு 26,010 26,080 26,150நிப்டி பேங்க்வர்த்தக நேரத்தில் அவ்வப்போது ஏற்றம் கண்ட நிப்டி பேங்க், மூன்று மணியில் இருந்து இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 63 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட ஏற்றத்திற்கான உற்சாகம் வடிந்துவிட்டது என்றே, மொமெண்டம் இண்டிகேட்டர்கள் காட்டுகின்றன. தற்போதைய லெவலில் தயங்கி, குழம்பி, சற்று நின்று, ஓய்வெடுக்குமா அல்லது, சிறியதொரு இறக்கம் காணுமா என்பது செய்திகளின் கையில்.ஆதரவு 58,760 58,620 58,510தடுப்பு 59,060 59,230 59,350


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ