24,000 புள்ளியில் ஆதரவு கிடைக்காவிட்டால் இறக்கம் தொடரக்கூடும்
நேற்று இரண்டு புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி பின்னர் தொடர்ந்து இறங்க ஆரம்பித்து, நாளின் இடையே 125 புள்ளிகள் வரை சரிந்து, பின்னர் நாளின் இறுதியில் 76 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 1 குறியீடு ஏற்றத்துடனும், 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மிட்கேப்50' குறியீடு மட்டும் 0.02 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தது. 'நிப்டி மிட்கேப்100' குறியீடு குறைந்தபட்சமாக 0.21 சதவீத சரிவுடனும், 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.63 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 4 குறியீடுகள் உயர்வுடனும், 17 குறியீடுகள் சரிவுடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு அதிகபட்சமாக 0.73 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,609 நிறுவனங்களின் பங்குகளில் 1,320 ஏற்றத்துடனும் 2,171 இறக்கத்துடனும், 118 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. மொமெண்டம் இண்டிக்கேட்டர்களான எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., (42.22), ஆர்.ஓ.சி., (-2.81) போன்றவை நிப்டி தொடர்ந்து பலவீனமாக இருப்பதையே காட்டுகின்றன.