மேலும் செய்திகள்
தினம் ஒரு பங்கு தினம் ஒரு பங்கு
5 hour(s) ago
ஐ.பி.ஓ., அலசல் ரென்டோமோஜோ லிமிடெட்
5 hour(s) ago
பேங்க் நிப்டி 3 நாட்களாக சரிவு
5 hour(s) ago
நடப்பாண்டில் ஐ.டி., பங்குகள் 22% சரிவு
08-Sep-2026
இ.டி.எப்., முதலீடுகளுக்கான அடிப்படை விலை, ப்ரீ - ஓபன் ஏலம் மற்றும் விலை வரம்பு தொடர்பான விதிகளில், செபி முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. முதலீட்டாளர்களை பாதுகாக்கவும், சந்தையின் அதீத ஏற்ற இறக்கங்களை முறைப்படுத்தவும் கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய விதிமுறைகள், செப்டம்பர் 7ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.*அடிப்படை விலையில் மாற்றம்:இதுவரை இரண்டு நாட்களுக்கு முந்தைய நாளின் என்.ஏ.வி., அடிப்படை விலையாக இருந்தது. இனி முந்தைய நாளின் கடைசி 30 நிமிட சராசரி சந்தை விலையே அடிப்படை விலையாக கருதப்படும். ஒருவேளை வர்த்தகம் நடைபெறாவிட்டால், கடைசி வர்த்தக விலையோ அல்லது என்.ஏ.வி.,யோ கணக்கில் கொள்ளப்படும்.* ஈக்விட்டி மற்றும் கடன் இ.டி.எப்.,கள்:முன்னதாக 20 சதவீதமாக இருந்த விலை வரம்பு, இனி ஆரம்பத்தில் 10 சதவீதமாக குறைக்கப்படும். 10 சதவீதத்தை தொட்டவுடன் 15 நிமிட 'கூலிங் ஆப்' இடைவேளைக்கு பின், விலை செல்லும் திசையில் வரம்பு மேலும் 5 சதவீதம் அதிகரிக்கப்படும்.*தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.,கள்:இந்த இ.டி.எப்.,களுக்கான ஆரம்ப விலை வரம்பு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விலை மாற்றங்களுக்கு ஏற்ப, கூலிங் ஆப் இடை வேளைக்கு பின் 3 சதவீதம் படிப்படியாக இது விரிவுபடுத்தப்படும்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
08-Sep-2026