மேலும் செய்திகள்
ஃபோரக்ஸ் :உருவானது இன்னொரு புயல்
27-Sep-2025
இந்திய ரூபாய்க்கு, சமீபத்தில் இரண்டு பெரிய சவால்கள் அமெரிக்காவில் இருந்து வந்தன. ஒன்று எச்1பி விசா கட்டண உயர்வு, அடுத்து மருந்துகளுக்கான வரி உயர்வு அறிவிப்பு. இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து அதிகளவிலான முதலீட்டை வெளியே எடுத்தனர். அடுத்து அமெரிக்காவில் வெளியான வலுவான தரவுகளால் டாலர் பலமடைந்தது. இருப்பினும் ரூபாய்க்கு ஆதரவாக சில விஷயங்களும் உள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி கவர்னர் வட்டி விகிதங்களை குறைப்பது குறித்து பேசியது, இந்தியாவில் மருந்து பொருட்களுக்கான வரி உயர்வால் அதிக தாக்கம் இல்லாதது, வர்த்தக பேச்சுகள் தரும் நம்பிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். இப்போதைக்கு, அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய் பரிமாற்ற விகிதம் 89.00 முதல் 89.20 என்ற மட்டத்தில், தடையை எதிர்கொள்கிறது. அதேசமயம், 88.40 என்ற அளவில் ஆதரவைக் காண்கிறது. உலகளாவிய சூழல்கள் தொடர்ந்து சமநிலையில் இருந்தால், ரூபாயின் மதிப்பு சற்று வலுப்பெறவே வாய்ப்பு அதிகம் உள்ளது. பரிமாற்ற விகிதம் 88.20-க்குக் கீழே முடிவடைந்தால், அது ரூபாயின் வீழ்ச்சிப் போக்கு மாறிவிட்டது என்பதற்கான முதல் அறிகுறியாக இருக்கும். அதுவரை, அமெரிக்காவின் வலுவான பொருளாதாரத் தரவுகளால் அழுத்தப்பட்டாலும், ஆதரவு அம்சங்களால் ரூபாய் ஒரு இழுபறி நிலையிலேயே இருக்கும்.
27-Sep-2025