24,700ஐ தாண்டி ஆரம்பித்தால் ஏற்றம் நிலைக்கலாம்
நிப்டி ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, இரண்டு முறை இறக்கத்தை சந்தித்து மீட்சி கண்டு, நாளின் இறுதியில் வந்த சரிவில் இருந்து முழுமையாக மீளாமுடியாமல், இறுதியில் 23 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. துறை சார்ந்த குறியீடுகளில் பி.எஸ்.யு., பேங்க், மெட்டல் மற்றும் ஆட்டோ குறியீடுகள் அதிக ஏற்றத்துடனும்; மீடியா, கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் மற்றும் ரியால்ட்டி குறியீடுகள் அதிக இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,118 பங்குகளில் 1,517 ஏற்றத்துடனும், 1,506 இறக்கத்துடனும், 95 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9): -64.35, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):38.13 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -2.00 என இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 24,700 என்ற நிலையைத் தாண்டி நாளை வர்த்தகம் ஆரம்பித்தால் மட்டுமே ஏற்றம் நிலைக்க வாய்ப்புள்ளது. 24,645 என்ற அளவுக்கு மேலே செல்லாமல், வர்த்தகம் நடைபெற்று வந்தால் இறக்கம் இன்னும் ஓரிரு நாட்கள் தொடரவாய்ப்புள்ளது. நிப்டி பேங்க் நாள் முழுவதும் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்ற நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 174 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9): -16.20, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 45.14 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): -0.32 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் தொடர்வதற்கு கட்டாயமாக 54,655 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகமாக வேண்டியிருக்கும். டெக்னிக்கல் சூழல்கள், இது போன்ற ஏற்றம் தொடர்வதற்கு சாதகமாக இல்லாத காரணத்தினால், செய்திகளைப் பொறுத்தே ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ஹெச்டிஎப்சி பேங்க் 952.50 2.20 2,82,96,687 58.33 டாடா ஸ்டீல் 169.05 0.07 2,45,53,596 56.19 ஐசிஐசிஐ பேங்க் 1,348.90 0.80 2,01,66,871 56.67 எட்டர்னல் 325.80 0.95 1,88,41,393 66.31 பவர்கிரிட் கார்ப்போரேஷன் 280.40 -0.20 1,87,72,881 73.75 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) யெஸ் பேங்க் 21.30 0.26 9,25,47,790 45.69 சுஸ்லான் எனர்ஜி 54.97 -0.31 5,76,39,009 49.06 என்எம்டிசி 76.58 1.55 3,21,58,354 47.73 ஐடிஎப்சி பர்ஸ்ட்பேங்க் 69.89 0.39 1,63,03,775 49.76 அசோக்லேலண்ட் 142.80 0.38 1,39,13,548 56.69 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ரெடிங்டன் 282.70 -8.54 1,57,12,755 11.41 பந்தன் பேங்க் 162.30 0.12 60,70,683 33.45 டெல்ஹிவெரி 453.90 14.00 51,96,195 60.05 ஐநாக்ஸ் விண்ட் 140.65 1.95 46,58,511 43.37 கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் 291.40 -2.25 45,50,209 60.01 புள்ளி விவரங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்போரேஷன் 368.70 61.93 7,15,232 எல்ஐசிஆப் இந்தியா 901.85 42.11 10,77,331 குஜராத் பிபாவாவ் போர்ட் 158.00 44.52 11,87,449 பெட்ரோநெட் எல்என்ஜி 278.95 59.79 33,85,073 பேங்க் ஆப் பரோடா 258.52 46.04 1,60,41,674 பொறுப்பு துறப்பு: பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.comஇணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: செப்டம்பர் 30, 2025.