மேலும் செய்திகள்
டிரெண்டு மாறியது; இன்னும் உறுதியாகவில்லை
18-Mar-2026
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 23,110.15 23,345.15 23,067.60 23,114.50 வர்த்தகம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் 300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட நிப்டி, பின் சிறிது இறங்கி, மீண்டும் 300 புள்ளிகள் வரை உயர்ந்து அதன்பின் நாளின் இறுதியில் 112 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 15 ஏற்றத்துடனும் 1 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால் கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 0.17 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.87 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 13 ஏற்றத்துடனும்; 6 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 0.93 சதவீத இறக்கத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.17 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,325 பங்குகளில், 1,884 ஏற்றத்துடனும்; 1,337 இறக்கத்துடனும்; 104 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கல் செட் - அப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., பலவீனத்தையே காட்டுகிறது. ஓரளவுக்கு ஓவர்சோல்டாக இருப்பதால், சிறு சிறு ஏற்றங்கள் வந்து போகலாம். 23,000-த்தில் சப்போர்ட்டும் 23,850-ல் ரெசிஸ்டென்சும் தற்போதைய சூழலில் இருக்கிறது. இந்த ரெசிஸ்டென்ஸை நோக்கி நிப்டி ஏற ஆரம்பித்து பயணிக்கும் போது, அவ்வப்போது இறக்கத்தை சந்தித்து தான் செல்ல வேண்டியிருக்கும். 23,350 என்ற லெவலை கடக்கவே தற்சமயம் நிப்டி சிரமப்படுவதால், செய்திகள் முழுமையாக சாதகமாக மாறினால் மட்டுமே, தொடர்ந்து ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு உருவாகும். ஆதரவு 23,000 22,875 22,775 தடுப்பு 23,275 23,450 23,550 ***** நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) ஹெச்.டி.எப்.சி., பேங்க் 781.00 -17.20 ஐ.டி.சி., 299.80 1.80 எட்டர்னல் லிட்., 233.00 4.26 டாடா ஸ்டீல் 196.38 5.87 ஸ்ரீராம் பைனான்ஸ் 934.00 -15.80 நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை) எஸ் பேங்க் 18.56 0.17 சுஸ்லான் எனர்ஜி 41.93 0.84 என்.எம்.டி.சி., 79.50 1.56 அசோக் லேலண்ட் 169.40 0.83 ஐ.டி.எப்.சி பர்ஸ்ட் பேங்க் 63.03 0.42 நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை) ஐநாக்ஸ் விண்டு 81.70 3.63 பந்தன் பேங்க் 158.50 0.44 என்.பி.சி.சி., இந்தியா 83.94 0.80 ஏஞ்சல் ஒன் 230.20 -2.22 மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் 2,410.00 -120.40 மற்ற சில பங்குகளின் விலை விபரம் அப்பல்லோ டயர்ஸ் 421.50 2.05 பார்தி ஏர்டெல் 1,844.80 17.80 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் 261.25 9.50 பினோலக்ஸ் கேபிள்ஸ் 882.00 32.20 ஜிந்தால் ஸ்டீல் 1,181.00 42.90
18-Mar-2026