உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வெளிநாட்டினர் முதலீடு செய்ய புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் தளம்

வெளிநாட்டினர் முதலீடு செய்ய புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் தளம்

அ ன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டின் சந்தைகளில் எளிதாக முதலீடு செய்யும் வகையில், இரண்டு புதிய டிஜிட்டல் தளங்களை என்.எஸ்.டி.எல்., அறிமுகம் செய்து உள்ளது. மும்பையில் நடைபெற்ற என்.எஸ்.டி.எல்., மாநாட்டில் இந்த புதிய, ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளங்களை செபி நிர்வாக இயக்குநர் டாக்டர் ரூச்சி சோஜர் அறிமுகம் செய்தார். இவை, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான பதிவு மற்றும் இணக்க செயல்முறைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்.பி.ஐ., போர்ட்டல் வாயிலாக, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய முடியும். எப்.வி.சி.ஐ., போர்ட்டல் வாயிலாக, வெஞ்சர் கேபிடல் பண்டுகள் மற்றும் பட்டியலிடப்படாத ஸ்டார்ட் -அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ