யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு 'எம்.டி.ஆர்.,' கட்டண முறை அமலுக்கு வரவுள்ள நிலையில், முதலீட்டு சந்தை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு சந்தை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீதம் என்ற குறைந்த விகிதத்தில் எம்.டி.ஆர்., வசூலிக்கப்பட்டாலும், அந்த செலவை சந்தை நிறுவனங்களே ஏற்றுக்கொள்கின்றன. எனவே, முதலீட்டாளர்களுக்கு பாதிப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எஸ்.ஐ.பி., மியூச்சுவல் பண்டுகளில் மாதந்தோறும் 'யு.பி.ஐ., ஆட்டோபே' வாயிலாக மேற்கொள்ளும் எஸ்.ஐ.பி., பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லை எனினும், எஸ்.ஐ.பி., அல்லாமல் ஒரு முறை மட்டும் மேற்கொள்ளப்படும் 'ஒன் டைம்' அல்லது 'லம்ப்சம்' முதலீடுகளுக்கு 0.02 சதவீத எம்.டி.ஆர்., கட்டணம் உண்டு உதாரணமாக 50,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணத்தையும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களே ஏற்கின்றன. பாதிக்குமா? எம்.டி.ஆர்., என்பது வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள், தரகு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பத்திர டீலர்கள் போன்றவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் ஆகும். முதலீட்டாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால், அவர்களுக்கு பாதிப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Gallery இயல்பு நிலை திரும்பும் எம்.டி.ஆர்., கட்டண அறிமுகத்தால், குறுகிய கால அடிப்படையில் பங்கு சந்தை வர்த்தக அளவில் சற்று தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இயல்பு நிலை திரும்பி விடும் என்று நம்புகிறேன் ஆஷிஷ் சவுஹான், தலைமை செயல் அதிகாரி என்.எஸ்.சி.இ.,