அடுத்த ஆண்டில் 30 சதவிகிதம் வரை தங்கத்தின் விலை உயரக்கூடும் உலக தங்க கவுன்சில் கணிப்பு
தங்கத்தின் விலை அடுத்த ஆண்டில், தற்போதைய நிலையிலிருந்து 15 முதல் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. காரணங்கள் * கரன்சி மதிப்பு குறைதல் * புவிசார் அரசியல் பதற்றம் * பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை * தங்க இ.டி.எப்., களுக்கான வரவேற்பு * நடப்பாண்டில் நிலைமை தங்கத்தின் விலை, இதுவரை கிட்டத்தட்ட 53 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வரிகள், புவிசார் அரசியல் கவலைகள் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கத்தை நோக்கி விரைந்தனர். மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் வட்டி விகித அறிவிப்புகளும், விலை உயர காரணமாக அமைந்தன. சரிவுக்கும் வாய்ப்பு தங்கத்தின் விலை, அடுத்த ஆண்டில் 5 முதல் 20 சதவீதம் வரை சரியவும் வாய்ப்புள்ளது. டிரம்பின் கொள்கைகள் வெற்றி பெற்று, அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சி ஏற்பட்டால், பணவீக்கம் அதிகரித்து, மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது நீண்டகால வட்டி விகிதங்களையும், அமெரிக்க டாலரையும் வலுப்படுத்தும். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து வெளியேறி, பங்குகள் மற்றும் அதிக வருமானம் தரும் சொத்துக்களுக்கு மாறலாம். பொதுவான நிலை புவிசார் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், தங்கம் தொடர்ந்து ஒரு போர்ட்போலியோவின் ஸ்திரத்தன்மைக்கான ஆதாரமாக இருக்கும்.