உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / 12,000 பேருக்கு வேலை விப்ரோ அறிவிப்பு

12,000 பேருக்கு வேலை விப்ரோ அறிவிப்பு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் 12,000 பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே பணி நியமன கடிதம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக விப்ரோ நிறுவனம் அதன் பணியாளர்களை குறைத்து வரும் நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் தெரிவித்துள்ளதாவது:விப்ரோ நிறுவனத்தில் ஏற்கனவே பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். கடந்த ஜூன் காலாண்டில் மட்டும் 3,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில் மட்டும் செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தில் பயிற்சிபெற்ற 10,000 முதல் 12,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். மேலும், எதிர்கால பணியாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, கல்வி நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை