உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கல்வி தொழில்நுட்ப துறையில் முதலீடுகள் 30 சதவீதம் சரிவு

கல்வி தொழில்நுட்ப துறையில் முதலீடுகள் 30 சதவீதம் சரிவு

புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், இந்தியாவின் கல்வி தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், 30 சதவீதம் குறைந்து, கிட்டத்தட்ட 1,800 கோடி ரூபாயாக இருந்தது என, 'டிராக்ஸன்' எனும் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்தியாவின் கல்வி தொழில்நுட்பத் துறையில், 16,028 நிறுவனங்கள் உள்ளன. இதில், கிட்டத்தட்ட 11,000 நிறுவனங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. உலகளவில் இதுநாள் வரை கல்வி தொழில்நுட்ப துறையில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், 30 சதவீதம் குறைந்து, கிட்டத்தட்ட 1,800 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் முதலீடுகள், 2,500 கோடி ரூபாயாக இருந்தது.எனினும், கடந்தாண்டின் இரண்டாம் பாதியில், இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் பாதியில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது, 683 கோடி ரூபாயாக இருந்த முதலீடு, தற்போது 1,360 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. கொரோனாவுக்கு பின், பள்ளி சென்று கல்வி கற்கும் பாரம்பரிய கல்வி முறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், ஆன்லைன் கல்வி முறைக்கான தேவை குறைந்துள்ளது. இது இத்துறையை பெரிதும் பாதித்துள்ளது. எனினும், புதுமையான கல்வி பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கான தேவை வலுவாகவே உள்ளது.இந்திய கல்வி தொழில்நுட்ப துறையில் ஒரு காலாண்டில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டது, கடந்த 2021ம் ஆண்டின் மூன்றாம் காலண்டில் தான். அப்போது, கிட்டத்தட்ட 20,600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. அதன் பின் முதலீடுகள் குறைந்தே தான் காணப்படுகிறது. எனினும், நிறுவனங்கள் பாரம்பரிய கல்வி முறைக்கு ஏற்றவாறு டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்த துவங்கியுள்ளதால், முதலீட்டாளர்களின் ஆர்வம் மீண்டும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த நிறுவனங்கள் 16,028

திரட்டிய நிதி ரூ.1 லட்சம் கோடிகடந்த இரு ஆண்டுகளில் திரட்டிய நிதி ரூ.9,100 கோடி கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் 111புதிய பங்கு வெளியிட்டவை 3

நிறுவனங்கள்

16,028கடந்த இரு ஆண்டுகளில் திரட்டிய நிதிரூ.9,100 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ