உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சந்திரபாபு நாயுடு மனைவிக்கு 5 நாட்களில் ரூ.579 கோடி

சந்திரபாபு நாயுடு மனைவிக்கு 5 நாட்களில் ரூ.579 கோடி

புதுடில்லி:தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு, கடந்த ஐந்து நாட்களில் மட்டும், 579 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 'ஹெரிட்டேஜ் புட்ஸ்' நிறுவனத்தில் 24.37 சதவீத பங்குகளுடன் நர புவனேஸ்வரி முக்கிய பங்குதாரராக உள்ளார். இவரது மகன் நர லோகேஷ், இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார்.இந்நிலையில், நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் கிடு கிடுவென உயர்ந்தன. கடந்த நான்காம் தேதி பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த போதும், இந்நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்தே காணப்பட்டன. கடந்த மே 31ம் தேதி 402.90 ரூபாயாக இருந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, நேற்றைய வர்த்தக நேர இறுதியில், தேசிய பங்குச் சந்தையில் 661.25 ரூபாயாக இருந்தது. இதையடுத்து நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு, ஐந்தே நாட்களில் 579 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
ஜூன் 11, 2024 11:40

அது ஏற்பட்டிரா? 5நாளில் 500 கோடி உயர்வு நாயுடு காரு ஏதோ மந்திரம் போடு உள்ளாரா இம்புட்டு பேரு பண்ணதை வச்சுக்கிட்டு நாட்டை ஏமாற்றிக்கொண்டு இருக்கானுக சி சி இந்த நாடும் நாடு மக்களும் என்னதான் செய்கிறார்கள் ஒரே மர்மமாக உள்ளது


VENKATASUBRAMANIAN
ஜூன் 08, 2024 08:20

இது ஒன்றும் புதிது இல்லை. நீங்கள் எவ்வளவு பங்குகள் வைத்துள்ளீர்களோ அதன்மேல் லாபம். அவ்வளவுதான்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை