உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / நீண்ட கால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு வருவாய் ரூ.98,000 கோடி

நீண்ட கால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு வருவாய் ரூ.98,000 கோடி

புதுடில்லி: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளிலிருந்து, நீண்ட கால மூலதன ஆதாய வரியாக, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், மத்திய அரசு 98,681 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பங்கு முதலீடுகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகளிலிருந்து ஈட்டும் லாபத்திற்கு வரி விதிக்கும் வகையில், மத்திய அரசு, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், நீண்ட கால மூலதன ஆதாய வரியை அறிமுகப்படுத்தியது. இதன்படி, 12 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் பங்குகளை விற்கும்போது, அதில் கிடைக்கும் லாபத்தில், 10 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. சிறிதளவு மட்டுமே லாபம் ஈட்டுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஈட்டும் லாபத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நீண்ட கால மூலதன ஆதாய வரி 12.50 சதவீதமாகவும்; விலக்கு 1.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
ஜூலை 31, 2024 15:02

இதன்மூலம் தெரிவது என்னவென்றால், மூலதன ஆதாயம் மொத்தமாக கிட்டத்தட்ட 10 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. இது என்ன ஏழை எளிய மக்களுக்கா கிடைக்கிறது? பங்குசந்தையில் விளையாடும் பணமுதலைகளுக்கு தானே? ஒருபுறம் இந்த அரசு பணக்காரர்களுக்கான அரசு ஏழைகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பார்கள், அதே சமயம் பணக்காரர்கள் மீது வரி விதித்தாலும் பொங்கி எழுவார்கள் அரசியல் வெறியில், எப்படியாவது விட்டதை பிடிக்கவேண்டும் ஆட்சி அதிகாரம் நம்முடைய பரம்பரை சொத்து அதை சாதாரண மக்கள் கையில் விடக்கூடாதுங்கற கொள்கை பிடிப்பில் உறுதியாக இருக்கிறார்கள்.


karthik
ஆக 02, 2024 08:39

10 லட்சம் கோடி இல்ல முருகேஷா.. அரசாங்கம் வரி வசூலிப்பதால் தான் கடந்த 5 ஆண்டுகளாக 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக மத்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது அது தெரியுமா முருகேஷா? ஆண்டுக்கு 6000 ரூபாய் சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது கடந்த 4 ஆண்டுகளாக அது தெரியுமா முருகேசா? நாடு முழுவதும் கோடி கணக்கில் இலவச கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா முருகேச? நாடு முழுதும் இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா முருகேச?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ