மேலும் செய்திகள்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் 2.50 % சரிவு
15-Aug-2024
புதுடில்லி:ஆகஸ்ட் மாதத்துக்கான வாகன விற்பனை அறிக்கையை, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. வாகன விற்பனை ஆகஸ்டில் 7.50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்டில், 19.45 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆகஸ்டில், 20.90 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதில், பயணியர் கார்களின் விற்பனை 1.61 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், இரு சக்கர வாகன விற்பனை 9.30 சதவீதம் உயர்ந்துள்ளது.உள்நாட்டு தயாரிப்பு 4.40 சதவீதம் உயர்ந்து, 24.91 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.பண்டிகை காலம் ஆரம்பிப்பதால், வாகனங்களின் தேவை படிப்படியாக உயரும். மத்திய அரசின் 'பி.எம்., இ - டிரைவ்' மற்றும் 'பி.எம்.,- இ - பஸ் சேவா' ஆகிய திட்டங்கள், வாகன விற்பனையை மேலும் உயர்த்த உந்துதலாக இருக்கும்.- ராஜேஷ் மேனன்பொது இயக்குனர், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம்
15-Aug-2024