இன்போசிஸ் மீது காக்னிசன்ட் வழக்கு
புதுடில்லி:வர்த்தக ரகசியங்களை அபகரித்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் மீது, 'காக்னிசன்ட்' வழக்கு தொடுத்துள்ளது. இருபெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையேயான இந்த மோதலில், தனது மருத்துவ காப்பீடு மென்பொருள் தொடர்பான தனியுரிமை கொண்ட தகவல்களை, இன்போசிஸ் அபகரித்துக் கொண்டதாக காக்னிசன்ட் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிசன்ட் துணை நிறுவனமான 'ட்ரிஜெட்டோ' வழக்கு தொடர்ந்த நிலையில், குற்றச்சாட்டுகளை இன்போசிஸ் மறுத்துள்ளது. இதுதொடர்பாக, இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் தரப்பில் தவறேதும் நடைபெறவில்லை என்றும், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உறுதியுடன் வாதிடுவோம் என்றும் கூறப்பட்டுள்ளது.