உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டூ இன் ஒன் எரிபொருளில் டூ-வீலர் தயாரிக்க நிறுவனங்கள் ரெடி

டூ இன் ஒன் எரிபொருளில் டூ-வீலர் தயாரிக்க நிறுவனங்கள் ரெடி

புதுடில்லி:ஒன்றுக்கு மேற்பட்ட எரிபொருளில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.சி.என்.ஜி., எல்.பி.ஜி., பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில், ஏதாவது இரண்டில் மாற்றி இயக்கக்கூடிய கார்களை, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்து வருகின்றன. அதேபோல், இருசக்கர வாகனங்களையும் தயாரிக்குமாறு வாகன தயாரிப்பு நிறுவனங்களை, அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.இந்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட எரிபொருளில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களை தயாரிக்க தயாராக இருப்பதாகவும்; ஜனவரி 2025ல் நடைபெறவுள்ள வாகன கண்காட்சியில் அவற்றை அறிமுகம் செய்வதாகவும் அமைச்சரிடம், 'டி.வி.எஸ்., மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்' ஆகிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. டில்லியில் வாகனத் துறை சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, நிதின் கட்கரி அண்மையில் நடத்திய ஆலோசனையின்போது இதை அவர்கள் தெரிவித்தனர்.இருசக்கர வாகனங்களை 85 சதவீதம் அல்லது அதற்கும் மேல் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கவும் தயாராக இருப்பதாக கூறிய அவர்கள், நாடுதழுவிய எத்தனால் கலப்பு எரிபொருளுக்கான தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தினர். அதேபோல், மாற்று எரிபொருளில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தினர். இதற்கிடையே, வாகனங்கள் மீதான அதிக வரிச்சுமை, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான இருசக்கர வாகனங்கள் தயாரிப்புக்கு மாறும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் சங்கமான 'சியாம்' தெரிவித்துஉள்ளது. இருசக்கர வாகனங்கள்85 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க நிறுவனங்கள் தயார்உறுதியளித்த நிறுவனங்கள்டி.வி.எஸ்., பஜாஜ் ஆட்டோ ஹீரோ ஹோண்டாகோரிக்கை ஜி.எஸ்.டி.,யை 28% இருந்து 18% ஆக குறைக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை