உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வதந்திகள் குறித் து நிறுவனங்களின் உடனடி விளக்கம்: செபி விதி அமலானது

வதந்திகள் குறித் து நிறுவனங்களின் உடனடி விளக்கம்: செபி விதி அமலானது

மும்பை:ஒரு நிறுவனம் குறித்து மீடியாக்களில் வதந்திகள் வரும்பட்சத்தில், அது குறித்து 24 மணி நேரத்துக்குள் அந்த நிறுவனம் அதனை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ வேண்டும் என்ற செபியின் புதிய விதி, நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், சந்தை மதிப்பின் அடிப்படையில், முதல் 100 நிறுவனங்களுக்கு இந்த விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல், இந்த விதிகள் முதல் 250 நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதான ஊடகங்களில் தெரிவிக்கப்படும் சந்தை தொடர்பான எந்தவொரு வதந்தியையும், வெளிவந்த 24 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ வேண்டும் என்ற விதியை கொண்டு வருவதாக செபி சமீபத்தில் அறிவித்தது. வதந்திகள் காரணமாக, நிறுவனங்களின் பங்கு விலையில் ஏற்படும் அதீத விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், உண்மை நிலவரத்தை அறிய, இந்த முயற்சி உதவும் என கருதப்படுகிறது.அதாவது, ஒரு நிறுவனத்தின் நிதி நிலை தொடர்பாகவும், நிர்வாக மாற்றங்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்தும் வதந்திகள் வரும்போது, அந்நிறுவனத்தின் பங்கு விலை அதீத ஏற்ற இறக்கத்தை சந்திக்கிறது. இந்நிலையில், பங்கு சந்தைகளில், 24 மணி நேரத்திற்குள் நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ செய்தால், கையகப்படுத்தல், பங்கு திரும்பப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளின் போது, அந்த ஏற்ற இறக்கங்களைத் தவிர்த்த விலையே கருத்தில் கொள்ளப்படும். மேலும், இது அனைத்து விதமான முதலீட்டாளார்களுக்கும், சரியான விலையை தெரிந்து கொண்ட பின், முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை