உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / செபி தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

செபி தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மும்பை: பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் தலைவர் பதவியில் இருந்து, மாதவி புரி புச் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, செபி ஊழியர்கள், மும்பை தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம், சமீபத்தில், மாதவி புரி புச் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தது. 'அதானி' நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டு நிறுவனம் துவங்கியதாகவும்; அதில் புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் இருவருக்கும் பங்குகள் இருப்பதாகவும் கூறியிருந்தது. இதையடுத்து, புச் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை செபி ஊழியர்களிடையே வலுத்து வருகிறது.இது குறித்து செபி வெளியிட்ட அறிக்கையில், 'ஊழியர்கள் சிலர், வெளிப்புற சக்திகளின் துாண்டுதலால் தவறாக வழி நடத்தப்படுவதாகவும், செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு தவறானவை' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊழியர்களுக்கு எதிரான கருத்துகளை திரும்ப பெறவும், தலைவர் பதவியில் இருந்து புச் உடனடியாக ராஜினாமா செய்யவும் வலியுறுத்தி, ஊழியர்களில் ஒரு பகுதியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthi
செப் 11, 2024 13:45

நீ குன்திரியமா யாரு சுருண்டனர் ராகுல் thane


வைகுண்டேஸ்வரன்
செப் 07, 2024 20:53

இன்னும் கொஞ்சம் ஆழமாக அலசினால், இந்த பெண்மணியும் கணவரும் பிரபல கட்சிகளுக்கு எவ்வளவு தேர்தல் பாண்ட் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்றும் தெரிய வரும்.


வைகுண்டேஸ்வரன்
செப் 07, 2024 20:50

ஒன்றிய அரசின் அனைத்து விதிகளுக்கும் எதிராக இயங்கி, கோடிகளைச் சுருட்டிய கணவன் மனைவிக்கு ஆதாரவாக கருத்து போடும் முட்டாள்களை ஒன்றும் சொல்லி திருத்த இயலாது. எதுக்கெடுத்தாலும் ராகுல் காந்தி என்று கதறிக்கிட்டே இருங்க


Saai Sundharamurthy AVK
செப் 07, 2024 11:03

ராகுல்காந்தி தான் தூண்டி விட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.


ஆரூர் ரங்
செப் 06, 2024 10:53

ஊழியர்களிடம் கடுமையான நேர்மையை எதிர்பார்த்து கண்டிக்கும் எல்லா உயரதிகாரிகளுக்கும் வரும் சோதனைதான் இது


புதிய வீடியோ