உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அதீத முன்னெச்சரிக்கையால் வீழ்ச்சி

அதீத முன்னெச்சரிக்கையால் வீழ்ச்சி

•வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் 1 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டது. இரண்டு நாள் உயர்வுடன் முடிந்த நிலையில், சந்தை குறியீடுகள் மீண்டும் சரிவுக்கு திரும்பின •உலகளாவிய சந்தை போக்குக்கு மாறாக, இந்திய பங்குச் சந்தை நேற்று மோசமான வீழ்ச்சியை பதிவு செய்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதால், டாலர் மதிப்பு, வரலாறு காணாத உயர்வை கண்டு வருகிறது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பு, தொடர்ச்சியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, முதலீட்டாளர்கள் அதீத முன்னெச்சரிக்கையுடன் பங்குகளை விற்றதால், சந்தை வீழ்ச்சி கண்டது •நிப்டி குறியீட்டில், அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கம் கண்டன. குறிப்பாக, உலோகத்துறை பங்குகள் 3 சதவீதம் சரிவு கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 1,827 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 2,128 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 98 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---4,889 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர். கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.33 சதவீதம் குறைந்து, 74.67 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் 1 பைசா குறைந்து, 84.32 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை அப்பல்லோ ஹாஸ்பிடல் எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., லைப் டி.சி.எஸ்.,அதிக இறக்கம் கண்டவை ஹிண்டால்கோ டிரென்ட் கிராசிம் ஸ்ரீராம் பைனான்ஸ் அதானி என்டர்பிரைசஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ