உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கரூர், பெரம்பலுாரில் காலணி ஆலை

5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கரூர், பெரம்பலுாரில் காலணி ஆலை

சென்னை:தமிழகத்தில், 'எவர்வான் கோத்தாரி புட்வேர்' நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.'பீனிக்ஸ் கோத்தாரி' குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி புட்வேர், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், கரூர் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளது. சென்னையில், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி நிறுவனம் இடையே, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. கோத்தாரி நிறுவனத்தின் ஆலைகளால், 50,000 பேருக்கு வேலை கிடைக்கும். கரூர், பெரம்பலுார் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பாக, பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், மக்களின் தனிநபர் வருவாய் அதிகரிப்பதுடன், உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என, அரசு தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் தாரேஸ் அகமது, எவர்வான் ஷுடவுன் குழும தலைவர் ரான், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் தலைவர் ரபீக் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !