உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஊட்டச்சத்து பானமாக மாறிய ஹார்லிக்ஸ்

ஊட்டச்சத்து பானமாக மாறிய ஹார்லிக்ஸ்

புதுடில்லி:ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தன் பிராண்டான 'ஹார்லிக்ஸ்' பானத்தை, 'ஆரோக்கிய பானம்' என வகைப்படுத்தி இருந்ததை மாற்றி, 'ஊட்டச்சத்து பானம்' என மாற்றி உள்ளது.இது குறித்து, ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ் திவாரி கூறியதாவது: ஆரோக்கிய பானங்கள் பிரிவில் இருந்து இவ்வகை பானங்களை நீக்குமாறு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சமீபத்தில் கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து பானங்களின் வகைகள், புரதம் மற்றும் நுண்ணுாட்டச் சத்து குறைபாடு தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். இவ்வாறு அவர் கூறினார்.சமீபத்தில், போர்ன்விடா மற்றும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாக எழுந்த புகார் எழுந்ததையடுத்து, அனைத்து மின்னணு வணிக நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தங்கள் தளங்களில் இருந்து 'ஹெல்த் டிரிங்க்ஸ்' வகையில் இருந்து போர்ன்வீடா உள்ளிட்ட பானங்களை நீக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி