மேலும் செய்திகள்
மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
01-Feb-2025
புதுடில்லி:கடந்த ஆண்டில், நாட்டின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை ஒன்பது முதல் 21 சதவீதம் வரை உயர்ந்ததாக, 'அனராக்' நிறுவன புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.இதுகுறித்து அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை, மும்பை ஆகிய நகரங்களைத் தவிர்த்து மற்ற பெரு நகரங்களில், 2024ல் இரட்டை இலக்கத்தில் வீட்டு வாடகை உயர்ந்தது. அதிகரிப்பு
சென்னையில் 9.40 சதவீதம் உயர்ந்த நிலையில், மும்பையில் அது 10 சதவீதமாக இருந்தது. மும்பையின் செம்பூர் பகுதியில் குறைந்த அளவாக 9 சதவீதம் உயர்ந்தது. டில்லி புறநகரான, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் அதிகபட்சமாக 21 சதவீதம் வாடகை அதிகரித்தது. பெங்களூருவின் சர்ஜாபூர் பகுதியில் 16.80 சதவீதமும்; தனிசந்திரா பகுதியில் 11 சதவீதமும் உயர்ந்தது. தேசிய தலைநகர் பகுதியான என்.சி. ஆரில் சராசரியாக 12 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்தது. இடப்பெயர்வு காரணம்
வருமான அதிகரிப்பால், வசதி குறைவான வீட்டில் இருந்து கூடுதல் வசதிகள் கொண்ட வீட்டுக்கு மாறுதல், ஒரு இடத்தில் இருந்து வேலை உள்ளிட்ட காரணங்களால் வேறு இடத்தில் குடிபெயர்தல் ஆகியவற்றால், வாடகை வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. இதனால், வாடகை தொகையும் அதிகரிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் வீட்டு வாடகை 30 சதவீதம் உயர்வு அதிக பொருட்கள் வாங்குவதால், இடம் போதாமல் பெரிய வீட்டுக்கு மாற்றம் சொந்த வீடு வாங்குவது அதிகரித்த போதிலும், வாடகை வீட்டுக்கான தேவையும் அதிகரிப்பு
01-Feb-2025