மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
புதுடில்லி: ஏற்கனவே முதலீடு செய்து வரும் தனிநபர் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களது நாமினிகளை நியமிக்க வேண்டும் என, சமீபத்தில் 'செபி' உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர்களது டிமேட் கணக்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டு கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்த பின், செபி இந்த உத்தரவை தற்போது திரும்பப் பெற்றுள்ளது. எனினும் நாமினிகள் குறித்த தகவல்களை பதிவேற்ற முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுமாறு, முதலீட்டு நிறுவனங்களை செபி கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, இந்த காரணங்களுக்காக ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் கணக்குகளை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக முதலீடு செய்யத் துவங்குவோர், நாமினிகளை நியமிக்க வேண்டும் என்ற விதி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமினி நியமிக்காத, கடன் பத்திரங்களை டிஜிட்டல் முறை இன்றி, சான்றிதழாக வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிவிடெண்டு, வட்டி உள்ளிட்ட தொகையை வழங்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025