உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / நான்கு நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து

நான்கு நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து

மினிரத்னா பிரிவு-1 எனும் அந்தஸ்தில் செயல்பட்டு வரும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு நவரத்னா அந்தஸ்து வழங்கி உள்ளது.நான்கு நிறுவனங்கள்என்.எச்.பி.சி.,நாட்டின் மிகப் பெரிய நீர்மின் மேம்பாட்டு நிறுவனம். பரிதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறதுஎஸ்.ஜே.வி.என்.,முன்னர் 'சட்லஜ் ஜல் வித்யுத் நிகம்' என்ற பெயரில் இருந்தது. சிம்லாவை தலைமையிடமாக கொண்டது. நீர்மின் உற்பத்தி மற்றும் மின் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதுஎஸ்.இ.சி.ஐ.,'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' எனும் இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான ஏலம் விடும் நிறுவனமாகும். தலைமையிடம் டில்லிரெயில்டெல் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பிராட்பேண்ட், வி.பி.என்., சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். தலைமையிடம் புதுடில்லிநவரத்னாவின் பலன்கள்ரூ.1,000 கோடி வரை, மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலே முதலீட்டை பெற முடியும்நிறுவனத்தின் நிகர மதிப்பில், ஓராண்டுக்குள் 30% வரை, அதிகபட்சம் 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்வெளிநாடுகளில் துணை நிறுவனங்கள் துவங்கலாம். கூட்டு வர்த்தகத்தில் இணையலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி