வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமையான பதிவு
மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
சரியான நிதியை தேர்வு செய்ய முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், 'செபி' உத்தேசித்துஉள்ள புதிய யோசனை பற்றி ஒரு பார்வை.'மியூச்சுவல் பண்ட்' முதலீட்டில் சரியான நிதியை தேர்வு செய்வது முக்கியம் என்றாலும் சவாலானது. பொதுவாக முதலீட்டாளர்கள் நிதியின் கடந்த கால செயல்பாட்டையும், பலனையும் முக்கிய அம்சமாக கருதுகின்றனர். அதே போல மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும், நிதியின் பலன்களை முக்கியமாக விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை கவர முயற்சிக்கின்றன. நிதிகள் அளிக்கும் பலன் முக்கிய அம்சம் என்றாலும், அவற்றோடு தொடர்புடைய இடர் அம்சம் பரவலாக கவனிக்கப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக அண்மையில், குறிப்பிட்ட சில பிரிவு நிதிகள் அதிக பலன் அளிப்பவையாக முன்னிறுத்தப்படுவது கவலையை ஏற்படுத்திஉள்ளது. இடர் அம்சம்
இந்த பின்னணியில், பங்கு சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி, நிதிகள் செயல்பாட்டில் இடர் அம்சத்தை கவனத்தில் கொண்டு வந்துள்ளது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிதிகளின் பலனை மட்டும் அல்லாமல், தொடர்புடைய இடர் அம்சத்தையும் குறிப்பிட வேண்டும் எனும் யோசனையை செபி முன்வைத்துள்ளது. இடர் அம்சத்தை கணக்கில் கொண்டு, பலனை தகவல் விகிதமாக வெளியிட வேண்டும் என்றும் செபி உத்தேசித்துள்ளது. இதற்கான ஆலோசனை குறிப்பை தயார் செய்துள்ள செபி, பொதுமக்களின் கருத்துகளையும் கோரியுள்ளது.மியூச்சுவல் பண்ட்கள் அளிக்கும் பலன், சந்தை போக்கு உள்ளிட்ட அம்சங்களை சார்ந்தே அமைகிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்கள் நிதியின் தன்மைக்கேற்ப முதலீடுகளை தேர்வு செய்து நிர்வகிக்கின்றன. இடர் தன்மையையும் அவை கருத்தில் கொள்கின்றன. அதிக பலன் எனில், இடர் அம்சமும் அதிகமாக அமைகிறது. ஆனால், நிறுவனங்கள் பலனை முன்வைக்கும் அளவுக்கு இடர் பற்றி குறிப்பிடுவதில்லை என கருதப்படுகிறது. எனவே தான், நிதிகள் பலனை மட்டும் குறிப்பிடாமல், அதற்கான இடரையும் சேர்த்து தகவல் விகிதமாக தெரிவிக்க வேண்டும் என உத்தேசித்து உள்ளது. முதலீட்டாளர் நலன்
இடர் அம்சம் பற்றி அறியாமல் பலனை மட்டுமே முக்கியமாக கருதி முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. மாறாக, இடர் அம்சம்- பலன் விகிதம் குறிப்பிடப்பட்டால் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் தெளிவை அளிக்கும். தற்போது இந்த விகிதத்தை வெளியிடுவது கட்டாயம் இல்லை. மேலும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இடர் மற்றும் பலன் விகிதத்தை கணக்கிட ஒரே மாதிரியான முறையையும் பின்பற்றுவதில்லை. இதை சீராக்கும் வகையில், இடர் சார்ந்த பலன் விகிதத்தை வெளியிடுவது கட்டாயம் என்றும், இதற்கான ஒரே மாதிரியான வழிமுறையையும் செபி பரிந்துரைத்துஉள்ளது.பலனை மட்டும் பார்க்காமல், இடர் விகிதத்தையும் அறிந்து கொள்வது, முதலீட்டாளர்கள் சரியான நிதியை தேர்வு செய்ய உதவும் அம்சமாக அமையும் என கருதப்படுகிறது. ஏனெனில், இரண்டு நிதிகள் ஒரே மாதிரி பலனை அளித்தாலும், அந்த பலனை பெற அவை கையாண்ட வழிமுறை கவனத்திற்குரியது. கூடுதல் பலனுக்காக கூடுதல் இடரை ஒரு நிதி நாடியிருந்தால், அதன் முதலீடும் கூடுதல் இடர் மிக்கதாக அமையும். அந்த வகையில் இதை எளிதாக முதலீட்டாளர்கள் அறிவது வரவேற்கத்தக்கது என்று கருதப்படுகிறது. அதைவிட முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
அருமையான பதிவு
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025