உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இணைய பிரபலங்களுக்கு செபி புதிய கட்டுப்பாடு

இணைய பிரபலங்களுக்கு செபி புதிய கட்டுப்பாடு

இணையத்தில் நிதி ஆலோசனைகளை வழங்கி வரும் செல்வாக்காளர்கள் என அழைக்கப்படுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், 'செபி' புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.இணையத்தில் பலரும் பலவித உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு சிலர் மிகவும் பிரபலமாக உள்ளனர். இவர்களுக்கு பயனாளிகள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது. இவர்கள் செல்வாக்காளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.இதே போல நிதித்துறை, முதலீடு தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்கி பிரபலமானவர்கள் நிதி செல்வாக்காளர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். செபியிடம் முறையாக பதிவு செய்யாத இந்த பிரிவினர், முதலீடு, பங்கு வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது விவாதத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நிதி செல்வாக்காளர்களை கட்டுப்படுத்தும் வகையில், செபி புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், செபியிடம் பதிவு செய்து கொண்டவர்கள், அவர்கள் கீழ் செயல்படுபவர்கள், பதிவு செய்து கொள்ளாமல், முதலீடு ஆலோசனை செய்பவர்களுடன் எந்த தொடர்பும்வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் விழிப்புணர்வு நோக்கில் செயல்படலாம் என்றும், அப்போது நிதி செல்வாக்காளர்கள் எந்த வித நிதி பரிந்துரையையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் செபி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rsudarsan lic
செப் 04, 2024 10:49

இது freedom of ஸ்பீச் அடிப்படையில் செல்லாது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை கட்டுப்படுத்த துப்பில்லை ஹிண்டன்பெர்க் போன்றவர்களை எதிர்க்க தைரியமில்லை செபி தலைவர் மீதே குற்றச்சாட்டுகள். வாட்ஸாப்ப் ல் பகிரும் செய்திகளை என்ன செய்வார்கள்? செபி சென்செக்ஸ் வீழ்ச்சியை என்று ஒழுங்கு படுத்தும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை