மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது திட்டங்களில் 'ரிஸ்க்'குகளை கணக்கில் கொண்ட பிறகு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை, முதலீட்டாளர்களுக்கு தானாக முன்வந்து தெரிவிக்க வகை செய்யும் திட்டத்தை 'செபி' முன்மொழிந்துள்ளது. தற்போதைய நடைமுறையின்படி, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தானாக முன்வந்து இது குறித்த தகவல்களை வழங்க வேண்டியதில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக, செபி தற்போது இத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள், இது குறித்த தங்களது கருத்துகளை வரும் ஜூலை மாதம் 19ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது, அந்த முதலீடு எவ்வளவு லாபம் ஈட்டித் தரும் என்ற விபரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், ஈட்டித் தரும் லாபத்தை மையப்படுத்தியே தங்களது திட்டங்களை விற்பனை செய்கின்றன. இதையடுத்து, இதன் முக்கியத்துவத்தை கருதி, இனி வரும் காலங்களில், திட்டத்தின் செயல்பாடுகளோடு சேர்த்து, ரிஸ்க்குகளையும் கணக்கில் கொண்ட பிறகு, கிடைக்க உள்ள லாபம் குறித்த தகவல்களை வழங்குவதற்கான முயற்சியில் செபி இறங்கி உள்ளது.
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025