உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.80 கோடி முதலீடு திரட்டிய ஸ்டார்ட் -அப் டி.என்

ரூ.80 கோடி முதலீடு திரட்டிய ஸ்டார்ட் -அப் டி.என்

சென்னை:துணிகர முதலீட்டில் ஈடுபட்டுள்ள 200 நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து, 80 கோடி ரூபாய் நிதியை திரட்டி இருப்பதாக, தமிழக அரசுக்கு சொந்தமான 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம் அறிவித்து உள்ளது.தமிழகத்தில் ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தாக்கத் தொழிலுக்கான வளர்ச்சியில் சாதகமான சூழலை உருவாக்குவதுடன், முதலீட்டாளர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் இணைப்பு பாலமாக 'ஸ்டார்ட் அப் டி.என்' செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், புத்தாக்க நிறுவனங்கள் முதலீட்டை பெற 'டான்பண்டு' எனப்படும் பிரத்யேக நிதி ஒருங்கிணைப்பு தளத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சி.ஐ.ஐ., அமைப்பின் 'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் 2024' மாநாட்டில் பங்கேற்ற, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் கூறியதாவது:புத்தாக்க நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ரீதியாக உதவும் வகையில், 55 கோடி ரூபாய் செலவில், 'ஐ.டி.என்.டி ஹப்' எனப்படும் தமிழக தொழில்நுட்ப மையத்தை அரசு அமைத்து உள்ளது. மேலும், தமிழகத்தின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வகையில், தமிழக இளைஞர்களில் 2 சதவீதம் பேரை, வெற்றிகரமான புத்தாக்க தொழில்முனைவோராக மாற்ற இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை