பங்கு சந்தை நிலவரம்
திசையறியாமல் தவிக்கும் முதலீட்டாளர்கள்
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நேற்றும், நிப்டி லேசான இறக்கம்; சென்செக்ஸ் லேசான ஏற்றம் என கலவையுடன் நிறைவு செய்தன. நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக மாதாந்திர காலாவதியை ஒட்டி, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதும், விற்பதும் என தொடர்ந்ததால், நேற்று சந்தை குறியீடுகள் ஊசலாட்டத்துடன் வர்த்தகமாகின. கடந்த ஐந்து மாதங்களாகவே தொடர்ச்சியாக சரிவைக் கண்டு வருகிறது நிப்டி. இதற்கு முன், கடந்த 1996ல், அதாவது 28 ஆண்டு களுக்கு முன் இப்படி தொடர்ச்சியாக ஐந்து மாத சரிவைக் கண்டது.அதன்பின் இப்போதுதான்இத்தகைய சரிவைக் கண்டுள்ளது.அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 557 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர். கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.69 சதவீதம் அதிகரித்து, 73.03 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 87.18 ரூபாயாக இருந்தது.