பங்கு சந்தை நிலவரம்
நாள் முழுதும் தள்ளாட்டம்
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த கவலையால், சிறிது நேரத்திலேயே ஐ.டி., தொலை தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றனர். இதனால், சந்தை சரிவுப் பாதைக்கு திரும்பியது.பின்னர், நாள் முழுதும் சந்தையில் தள்ளாட்டம் நீடித்தது. முடிவில், நிப்டி, சென்செக்ஸ் சிறியஇறக்கத்துடன் நிறைவு செய்தன.அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,628 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.34 சதவீதம் உயர்ந்து, 69.80அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து, 87.22 ரூபாயாக இருந்தது.