உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் : முதலீட்டாளர்களின் விலகாத அச்சம்

பங்கு சந்தை நிலவரம் : முதலீட்டாளர்களின் விலகாத அச்சம்

முதலீட்டாளர்களின் விலகாத அச்சம்

தொடர்ச்சியாக நான்காவது நாளாக, நேற்றும் இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. டிரம்பின் வரி விதிப்பு கொள்கை, தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், நிறுவனங்களின் மந்தமான காலாண்டு முடிவுகள் என, தொடரும் சிக்கல்களால், வர்த்தகம் ஆரம்பித்த போதே சரிவுடன் துவங்கியது. மேலும், அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா வருகையால், இந்திய மின்சார வாகன தயாரிப்புகள் விற்பனை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், முதலீட்டாளர்கள் அந்நிறுவனங்களின் பங்குகளை விற்றதால், சந்தை மேலும் சரிந்தது. வாராந்திர அடிப்படையில், இரண்டாவது வாரமாக சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 3,449 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றுஇருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.59 சதவீதம் குறைந்து, 76.05 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து, 86.71 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி