உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / யெஸ் பேங்க் பங்குகள் ரூ.1,600 கோடிக்கு விற்பனை

யெஸ் பேங்க் பங்குகள் ரூ.1,600 கோடிக்கு விற்பனை

தனியார் வங்கியான யெஸ் பேங்கின் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், பங்குச் சந்தையில் நேற்று கைமாறியுள்ளது. பங்கு ஒன்றின் விலை 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 63.60 கோடி பங்குகள் கைமாறி உள்ளது. இது வங்கியின் மொத்த பங்குகளில் 2.20 சதவீதமாகும். ஒட்டுமொத்தமாக 1,602 கோடி ரூபாய்க்கு பரிமாற்றம் நடந்துள்ளது. பங்குகளை விற்றவர்கள் வாங்கியவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனினும், வங்கியின் பங்குதாரரான கார்லைல் குழுமம், அதன் 2 சதவீத பங்குகளை விற்க திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்