உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அரக்கோணத்தில் ரூ.15 கோடியில் புதிய ரயில் சரக்கு முனையம்

அரக்கோணத்தில் ரூ.15 கோடியில் புதிய ரயில் சரக்கு முனையம்

சென்னை:அரக்கோணம் ரயில் நிலையம் அருகில், 15 கோடி ரூபாயில் புதிய சரக்கு ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது.மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், ரயில்வேயில் பல்வேறு புது திட்டங்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சரக்குகளை கையாளும் வகையில் ரயில்வே ஷெட்டுகள் அமைப்பது, புதிய சரக்கு முனையம் அமைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, புதிய சரக்கு ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பயணியர் கட்டணங்களை உயர்த்தாமல், மாற்று வழிகளில் வருவாயை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்களில் சரக்குகளை அதிகளவில் கையாள வாய்ப்புள்ள இடங்களில், தனியார் பங்களிப்புடன் புதிய முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி, அரக்கோணம் ரயில் நிலையம் அருகில், 15 கோடி ரூபாயில் புதிய சரக்கு ரயில் முனையம் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி